• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தமிழ் சினிமாவில் வெளிவரும் படங்களில் புதிய கதைகளத்தை கொண்டிருக்கும் படங்கள் மிகமிக குறைவு ஏற்கனவே வந்த படங்களை கொரோனா உருமாற்றம் அடைந்து வருவதை போன்று மாற்றி எடுக்கப்படும்படங்கள் அதிகம் அதில், இந்தப் படம் இரண்டாவது வகை.

வாட்சப் யுகத்தில் ஒரு காதல் கடிதத்தை வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். இந்தக் காலத்தில் காதல் கடிதம் என்றால் என்ன என்று கேட்பார்கள் காதலர்கள்.
ஊரே கட்டுப்படும் அளவுக்கு கௌரவமானவர்பிரபு. ஊருக்கு பள்ளி வர காரணமாக இருந்த அவரது மகன் முகேன் +2 வில் பெயிலானதால் மகனுடன் பேசுவதை நிறுத்திவிடுகிறார். கடுமையான முயற்சியில் தேர்வு எழுதி +2 முடித்து கல்லூரியில் சேர்கிறார் முகேன்.

அங்கே, சக மாணவி மீனாட்சி கோவிந்தராஜனைப் பார்த்ததும் காதல் வயப்படுகிறார் காதலை சொல்ல காதல் கடிதம் எழுதி அவர் ஊருக்குச் சென்று கொடுக்க முயல, ஒரு குழப்பத்தில் கடிதம் தம்பி ராமையா கையில் கிடைக்கிறது. தன் மகளுக்குத்தான் முகேன் காதல் கடிதம் எழுதினார் என பிரபுவிடம் வந்து சண்டை போட வேகமாக வருகிறவர்பிரபுவின் குடும்ப சூழலை பார்த்து பம்மி போய் கடித விவகாரத்தை கூற மகனின் விருப்பம் அறிந்து திருமணத்திற்கு சம்மதிக்கிறார்.

ஆனால் அது முகேன் காதலிக்கும் பெண் இல்லை என்பது தெரியவருகிறபோது திரைக்கதையில் திருப்பம் ஏற்படுகிறது அப்பா கொடுத்த வாக்கிற்காக தன் காதலை பலி கொடுப்பதா என்கிற தடுமாற்றத்தில் மீனாட்சியுடனான காதலை முறிக்கவும் முடியாமல் தொடரவும் முடியாமல் தடுமாறுகிறார். அவரது காதல் என்ன ஆனது, யாருடன் திருமணம் ஆனது என்பதுதான் மீதிக் கதை.

பிக் பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னரான முகேன் இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கிறார் ஓரளவிற்கு நடிக்க முயற்சித்திருக்கிறார். முகேன் காதலியாக மீனாட்சி கோவிந்தராஜன். படத்தில் மலையாளப் பெண் கதாபாத்திரம். கொஞ்சம் காதல், பின்னர் அழுகை என நகர்கிறது அவரது கதாபாத்திரம்.

படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் முன்னணி நடிகர்களை நடிக்க வைத்திருக்கிறார்கள். முகேனின் அப்பாவாக பிரபு, இடைவேளைக்குப் பின்தான் வருகிறார் சூரி. ஒரு சில காட்சிகளில் நகைச்சுவை பன்ச் அடித்து சிரிக்க வைக்கிறார். தம்பி ராமையா வழக்கம் போல கத்தி இரைச்சல் கூட்டுகிறார்வில்லனாக ஹரிஷ் பெரடி. இடைவேளை வரை கல்லூரி காட்சிகளில் வரும் ராகுல் அதன்பின் காணாமல் போகிறார்.
கோபி சுந்தர் இசையில் பாடல்கள் சுமார் ரகம். கோபி ஜெகதீஸ்வரன் பொள்ளாச்சி, பாலக்காடு பகுதிகளை அதன் இயல்பு தன்மை மாறாமல் பதிவு செய்திருக்கிறார்

திரைக்கதையில் டிங்கர்பட்டி பார்த்திருந்தால் போரடிக்காமல் பார்க்ககூடிய வேலனாக இருந்திருக்கும்

வேலன் – கூர்தீட்டப்பட்டிருக்கவேண்டும்

படம்: வேலன்
தயாரிப்பு – ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்
இயக்கம் – கவின்
இசை – கோபி சுந்தர்
நடிப்பு – முகேன் ராவ், மீனாட்சி கோவிந்தராஜன், பிரபு, சூரி
வெளியான தேதி – 31 டிசம்பர் 2021