• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வசூல்ராஜா “ஓபிஎஸ்” – ஜெயக்குமார் கிண்டல்

ByA.Tamilselvan

Aug 30, 2022

உலக கோடீஸ்வரர் வரிசையில் இருப்பவர் போல பணம் வைத்திருக்கும் ஓபிஎஸ் .. வசூல்ராஜா ஓபிஎஸ் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் பார்த்திருப்போம் ஆனால் இவர் வசூல்ராஜா ஓபிஎஸ் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் “அனைத்து பதவிகளையும் என்னிடம் இருந்து பறித்தவர் தான் ஓபிஎஸ். உலக கோடீஸ்வரர் வரிசையில் இருப்பவர் போல பணம் வைத்திருக்கிறார் .உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்தவர் ஓபிஎஸ் என்று கடுமையாக கிண்டல் செய்து சாடியுள்ளார்.