• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

காரியாபட்டியில் ஸ்ரீ கபால காளியம்மன் கோவில் வருஷாபிஷேகம்

ByG.Ranjan

Jul 21, 2024

காரியாபட்டி அருகே ஸ்ரீ கபால காளியம்மன் திருக்கோவில் வருஷாபிஷேகம்திருவிழா நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் 16 அடி ஸ்ரீ கபால காளியம்மன் கோவில் சார்பில் வருஷாபிஷேகம் மற்றும் பாலாபிஷேகம் நடைபெற்றது. வருஷாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி ஹோமம், மஹா சங்கல்பம், பூர்ணாகுதி , ,, அஷ்ட லெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், மற்றும் சிறப்பு யாக சாலை பூஜைகள் நடைபெற்றது.. காலை 9 மணியளவில் காரியாபட்டி முருகன் கோவிலிருந்து மேளதாளங்கள் முழங்க ஆயிரக்கணக்கானபெண் பக்தர்கள் அக்னிசட்டி மற்றும் 1008 பால்குடங்கள் ஏந்தி ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அதன்பிறகு, அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப் பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி செல்வக்கனி சுவாமிஜி செய்திருந்தனர்.