மதுரை மாவட்டம் சோழவந்தான் விக்கிரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் பல்வேறு தீர்மானங்கள் நடைபெற்றது விக்கிரமங்கலம் கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் பால்பாண்டி அறிக்கை வாசித்தார்.

மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரி மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர் கிராம சபை கூட்டத்தில் ஊராட்சிக்கு உட்பட்ட பாண்டியன் நகர் பகுதியில் விபத்தை குறைக்கும் நடவடிக்கையாக வேகத்தடை அமைக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதலைக்குளம் ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் பாண்டி அறிக்கை வாசித்தார். பற்றாளர் சந்திரமதி கலந்து கொண்டார் முதலைக்குளம் கீழப்பட்டி கொசவபட்டி மலையூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 7 000 மக்கள் தொகை கொண்ட முதலை குளத்தில் கனரா வங்கி சார்பில் ஏடிஎம் இயந்திரம் அமைக்க வேண்டும் மற்றும் தபால் அலுவலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்டித் தர வேண்டும். கால்நடை மருத்துவமனைக்காக விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட நரியம்பட்டி கிராமத்திற்கு 12 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளதால் முதலைக்குளம் கிராமத்தில் கால்நடை மருத்துவமனை அமைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

காடுபட்டி ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் ஒய்யனன் அறிக்கை வாசித்தார் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சுதா கலந்து கொண்டார் காடுபட்டி வடகாடு பட்டி பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் தேவைகளுக்கான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மன்னாடிமங்கலம் ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் செந்தில் அறிக்கை வாசித்தார். மன்னாடிமங்கலம் தாமோதரன் பட்டி ஐயப்பன் நாயக்கன்பட்டி கிராமங்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சியில் தெருவிளக்குகள் அமைப்பது மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளை சுகாதாரமாக வைத்துக் கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. க முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் சின்ன மாயன் அறிக்கை வாசித்தார்.
பற்றாளர் தென்குமரி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் பொதுப்பணித்துறை சார்பில் சாலைகள் விரிவாக்கம் செய்வது குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஊராட்சிக்கு உட்பட்ட புது தெரு பவர் பள்ளி பகுதியில் கழிவுநீர் கால்வாய் வெளியேறி செல்ல நடவடிக்கைகள் எடுப்பது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தென்கரை ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் முனிராஜ் அறிக்கை வாசித்தார். பற்றாளர் திருப்பதி
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தென்கரை ஊத்துக்குளி நாராயணபுரம் மேல மட்டையான் மலைப்பட்டி புதூர் ஆகிய கிராமங்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சுகாதாரமான குடிநீர் மற்றும் தெருவிளக்குகள் சாலை வசதி ஏற்படுத்தி தருவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலக்கால் ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் விக்னேஷ் அறிக்கை வாசித்தார். மேலக்கால் கச்சிராயிருப்பு கீழ மட்டையான் பகுதியில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர் ஆரம்ப சுகாதார நிலையத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது குடிநீர் தெரு விளக்கு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தருவது குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. குருவித்துறை ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் அறிக்கை வாசித்தார் வற்றாளர் மூர்த்தி மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.





