• Thu. Feb 5th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

வால்பாறை எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி உயிரிழப்பு !!!

ByKalamegam Viswanathan

Jun 21, 2025

கோவையை சேர்ந்தவர் அமுல்கந்த சாமி. இவர் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வால்பாறை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

கடந்த சில நாட்களாக அமுல் கந்தசாமி உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதை அடுத்து அவரது குடும்பத்தினர், அவரை கோவையில் ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் சிகிச்சையில் இருந்தபோது அமுல்கந்த சாமியிடம் உடல் நலம் விசாரிப்பதற்காக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை கோவை வந்தார்.

அவர் மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் அமுல் கந்தசாமி எம்.எல்.ஏ வை நேரில் சந்தித்து அவரிடம் நலம் விசாரித்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாவட்டச் செயலாளர் அம்மன் அர்ச்சுணன் எம்.எல்.ஏ மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி கார் மூலம் சேலம் புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.