• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

வலிமைக்கு விமோசனம் பிப்ரவரி 24 வெளியீடு

அஜித்குமார் நடித்துள்ள ‘வலிமை’ வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொங்கலையொட்டி கடந்த ஜனவரி 13 ஆம் தேதி வெளியாவதாக இருந்த ‘வலிமை’ படத்தினை கொரோனா அதிகரிப்பாலும் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்பதாலும் தள்ளி வைத்தது படக்குழு. இதனால், ஏப்ரலில் வெளியாகும் ‘பீஸ்ட்’டுக்கு முன்னால் ’வலிமை’ படத்தினை மார்ச் மாதம் கொண்டுவர படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், தற்போது தமிழக அரசு ஊரடங்கு விதிகளையும் கொரோனா விதிமுறை கட்டுப்பாடுகளையும் தளர்த்தியுள்ளதால், வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி ‘வலிமை’ படத்தினை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. ‘வலிமை’ படத்தில் அஜித்குமார், பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி நாயகியாகவும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார்கள் இது சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்பு தயாரிப்பாளர் தரப்பில் இருந்து நாளை வெளியாகும்என எதிர்பார்க்கப்படுகிறது.