• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தேனியில் பா.ஜ.க., சார்பில் வாஜ்பாய் பிறந்த நாள் விழா

முன்னாள் பாரத பிரதமர் அடல் பிடாரி வாஜ்பாய் 97, வது பிறந்த நாள் இன்று (டிச.25) நாடு முழுவதும் பா.ஜ.க,, சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தேனி மாவட்டத்தில் தேனி-பெரியகுளம் ரோட்டில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் தேனி நகர தலைவர் விஜயக்குமார் தலைமையில் நிர்வாகிகள் வாஜ்பாய் படத்திற்கு மாலை அணிவித்து,

பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் பாண்டியராஜன், தொழில்நுட்ப பிரிவு மணிகண்டன், மாவட்ட மகளிரணி தலைவி சுஜாதா, நகர செயலாளர் ஜெயமுருகன், பொருளாளர் ஜெயராஜ், நகர பொதுச் செயலாளர் மதிவாணன், வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் ஜெயராமன், மீனவரணி மாவட்ட தலைவர் கோபி உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.