• Fri. Apr 19th, 2024

அத்ரங்கி ரே சிறப்பு பார்வை

இயக்கம் – ஆனந்த் எல் ராய்
இசை – ஏஆர் ரகுமான்
நடிப்பு – தனுஷ், அக்க்ஷய்குமார்,
சாரா அலிகான்
வெளியான தேதி – 24 டிசம்பர் 2021
நேரம் – 2 மணி நேரம் 17 நிமிடம்

இந்தியில் ‘அத்ரங்கி ரே’ என்ற பெயரில் வலைத் தளத்தில் வெளியாகியுள்ள படத்தின் தமிழ் பதிப்பு வடிவம் தான் கலாட்டா கல்யாணம் 2013ல் வெளியான ‘ராஞ்சனா’ படத்தின் மூலம் தனுஷை இந்தியில் அறிமுகப்படுத்திய ஆனந்த் எல்.ராய் மீண்டும் தனுஷை கதாநாயகனாக நடிக்க வைத்துள்ள இந்திப் படம் இது. அக்க்ஷய்குமார் கவுரவத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

பீகாரைச் சேர்ந்த பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர் சாரா அலிகான். அவர் 21 முறை அவரது காதலன் அக்க்ஷய் குமாருடன் ஓடிச் செல்ல முயன்று, தோல்வியடைந்து குடும்பத்தினரிடம் சிக்கியவர். அவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டுமென முடிவெடுக்கிறார்கள். அந்த ஊருக்கு வந்த மருத்துவக் கல்லூரி மாணவர், தனுஷைக் கடத்தி வந்து கட்டாயக் கல்யாணம் செய்து வைத்து விடுகிறார்கள். அடுத்த இரண்டு நாட்களில் தனுஷுக்கு வேறொரு பெண்ணுடன் திருமண நிச்சயம் நடக்க வேண்டிய நிலையில் சாராவுடன் திருமணம் நடந்து விடுகிறது.

சாராவின் காதலன் தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பி வரும் வரையில் இருவரும் ஒன்றாகத் தங்கியிருக்க முடிவெடுக்கிறார்கள். இருப்பினும் தனது திருமண நிச்சயத்திற்குச் செல்கிறார் தனுஷ். அங்கு உண்மை தெரியவர நிச்சயம் நின்று விடுகிறது. பின்னர் சாராவுடன் தான் தங்கி இருக்கும் விடுதிக்கு திரும்புகிறார். அக்க்ஷய்குமாரும் திரும்பி வர, அவருடன் சாராவை அனுப்ப முடிவு செய்யும் போது எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது.

அது என்ன என்பதுதான் படத்தின் எஞ்சிய கதை.இடைவேளை வரை கலாட்டாவாக கடந்துபோகும் படம் அதன் பின் திரைக்கதையில் திருப்பம் இல்லாத காரணத்தால் தட்டுத்தடுமாறுகிறது. திரைக்கதை தடுமாற்றத்தை சரி செய்திருந்தால் சுவாரசியமான படமாக கலாட்டா கல்யாணம் அமைந்திருக்கும்.முழு படத்தையும் தனுஷ் தாங்கிப் பிடிக்கிறார். உணர்வுபூர்வமான பல காட்சிகள் அவருக்குப் படத்தில் உண்டு. இரண்டு முறை தேசிய விருது வாங்கியவர் என்பதை படம் முழுவதும் தனது நடிப்பு ஆளுமையால் நிரூபித்திருக்கிறார். தமிழ் இளைஞன் கதாபாத்திரம் என்பதால் அவருக்கு எளிதாக பொருந்திப்போகிறதுதமிழ் பதிப்பிற்கு தனுஷ் குரல் கொடுத்திருப்பதால் நேரடி தமிழ்ப்படம் பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது

துரு துருகுமரிகதாபாத்திரத்தில் சாரா அலிகான். அவருடைய கதாபாத்திரத்தில் எந்த அளவிற்கு இளமைத் துள்ளலுடன் செய்ய முடியுமோ அந்த அளவிற்குச் செய்திருக்கிறார். இல்லாத அக்க்ஷய்குமார் கதாபாத்திரத்தை இருப்பது போல் உணரும் மனதளவில் பாதிக்கப்பட்ட கதாபாத்திரம்.

அது மாயை என்பது தெரியாமல் அப்படியே இயல்பாய் நடித்திருக்கிறார்.
சிறப்புத் தோற்றம் என்றாலும் படம் முழுவதும் வரும் கதாபாத்திரமாக அக்க்ஷய்குமார் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவருடைய நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய வாய்ப்பில்லை என்றாலும் படத்திற்கு பலம் சேர்க்கிறார்.ஏஆர்.ரஹ்மான் இசையில் ‘சக்க சக்க சக்களத்தி’ பாடல் ஆட்டம் போட வைக்கிறது காரைக்குடி அரண்மனை போன்ற வீடுகளில் தமிழ் இயக்குனர்கள் கூட இவ்வளவு சிறப்பாக பாடல்களைப் படமாக்கியது இல்லை.


கலாட்டா கல்யாணம் – முதல் பாதியில் கலாட்டா..இரண்டாம் பாதியில் கலவரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *