மதுரை கிழக்கு மாவட்டம் சோழவந்தான் அருகே பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு சார்பாக முப்பெரும் விழா நடைபெற்றது. முன்னாள் பாரத பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தல், பாஜக கொடியேற்றுதல் பாஜக உள்ளாட்சி பிரிவு கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

உள்ளாட்சி மேம்பாட்டுபிரிவு மாநில செயலாளர் சிவ முருகேச பாண்டியன் தலைமை வகித்தார். உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் மகாலிங்கம் சோழவந்தான் தொகுதி பொறுப்பாளர் பழனிவேல்சாமி அமைப்பாளர் தங்கவேல் சாமி முன்னிலை வகித்தனர். உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் நாகுஆசாரி வரவேற்றார். இதில் நிர்வாகிகள் உதயகுமார் முருகேஸ்வரி ஓ பி சி பிரிவு அண்ணாதுரை வாடிப்பட்டி தெற்கு மண்டல் நாட்டரசன் சோழவந்தான் மண்டல் தலைவர் கதிர்வேல் சமயநல்லூர் மண்டல் தலைவர் கணேசன் ரமேஷ் கருப்பசாமி செல்லப்பாண்டி விஜய சரவணன் சசிகுமார் காமராஜ் மோகன் டீக்கடை விஜி சரவணன் தங்க ராஜா கேசவமூர்த்தி உட்பட பாஜக நிர்வாகிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்




