மதுரை வைகை மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ராஜனுக்கு ரோட்டரி அமைப்பின் உயரிய விருதான வொகேஷனல் எக்ஸலன்ஸ் அவார்ட் வழங்கப்பட்டது .
மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் சார்பில், ‘உலக தண்ணீர் தின’த்தை முன்னிட்டு மதுரை ஹோட்டல் ஜேசி அரங்கில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க தலைவர் நெல்லை பாலு தலைமை தாங்கினார். செயலாளர் எஸ்.கதிரவன் .பொருளாளர் டி.சண்முகம் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் மதுரை ‘வைகை நதி மக்கள் இயக்க’ ஒருங்கிணைப்பாளர் ராஜன் சேவையை பாராட்டி வொகேஷனல் எக்ஸலனஸ் அவார்டு பட்டயமும் கேடயமும் வழங்கப்பட்டது.இதனை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கத் தலைவர் நெல்லை பாலு வழங்கினார் சொற்பொழிவாளர் சண்முக திருக்குமரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ‘எது தொண்டு’ என்ற தலைப்பில் அவர் பேசியதாவது, ” நம் முன்னோர்கள் என் கடன் பணி செய்து கிடப்பதே எனச் சொல்லிச் சென்றுள்ளனர். தொண்டு செய்வதை நம் வாழ்நாள் குறிக்கோளாக கொண்டு செயல்பட வேண்டும். உலகத்திற்காக சேவை செய்வது பெரிய விஷயம்.
நாம் சொல்லித் தருவதைத்தான் பிள்ளைகள் பின்பற்றுவார்கள். சிறுவயதிலேயே அவர்கள் பிறருக்கு கொடுத்து உதவும் பழக்கத்தை பெற்றோர் ஊட்டி வளர்க்க வேண்டும். குழந்தை சாப்பிடாவிட்டால், வேறு குழந்தைக்கு கொடுத்து விடுவேன் போன்ற எதிர்மறைச் சொற்களை பேசக்கூடாது. நாமும் நல்லதையே பேச வேண்டும்.
தொண்டு செய்ய மிகப் பெரும் பொருளாதாரம் தேவை என நினைக்கக் கூடாது. நம்மிடம் இருப்பதைக் கொண்டு கூட தொண்டு செய்யலாம். அதற்கு பணம் தேவையில்லை, மனம் தான் தேவை.
வெயில் காலம் வரவிருக்கிறது. தெருவில் போவோர்களுக்காக வீட்டு வாசலில் தண்ணீர் வையுங்கள். அதுவே பெரிய தொண்டு தான். பிறருக்கு உதவி செய்யும் குணத்தில் தான் மன நிறைவு கிடைக்கும் “
இவ்வாறு அவர் பேசினார்.சிறப்பு வருந்தினர் சண்முக . . திருக்குமரனை சி.எம். ஆதவன் அறிமுகம் செய்தார். செயலாளர் கதிரவன் நன்றி கூறினார்.