• Mon. Mar 2nd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி கட்டாயம் சீனாவில் அதிரடி…

Byமதி

Oct 27, 2021

சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கன்சு மாகாணத்தில் உள்ள லான்ஜவ் சிட்டியில் மீண்டும் ஊரடங்கு நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.

இந்தநிலையில், 5 மாகாணங்களில் 3 முதல் 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சீனாவில் சினோபார்ம் மற்றும் சினோவாக் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த இரண்டு தடுப்பூசிகளையும் குழந்தைகளுக்கு செலுத்த சீன அரசு அனுமதி அளித்துள்ளது. ஹூபெய், ஃபுஜியான், ஹெனான், ஸீஜியாங், ஹூனான் ஆகிய 5 மாகாணங்களில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை மாகாண அரசுகள் கட்டாயமாக்கியுள்ளன.