• Sat. Apr 26th, 2025

வி. பி.எம்.எம். கல்லூரியில் பட்டமளிப்பு விழா..,

ByT. Vinoth Narayanan

Mar 22, 2025

ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை ரோட்டில் உள்ள வி பி எம் எம் கல்வி நிறுவனத்தில் 26 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது பட்டமளிப்பு விழாவிற்கு சேர்மன் வி பி எம் சங்கர் தலைமை தாங்கினார் விழாவில்தாளாளர் பழனிச்செல்வி சங்கர் துணை சேர்மன் தங்க பிரபு,இயக்குனர் பூர்ணிமா இமானுவேல்.முதல்வர்கள் மீனாட்சி சுந்தரம், ஷமிம் ராணி,மணிமேகலை மற்றும் அனைத்து கல்லூரி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சுமார் 1200 மாணவிகளுக்குதஞ்சை மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் ராஜரத்தினம் பட்டங்களை வழங்கினார் மேலும் அண்ணா பல்கலைக்கழகம் டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதலிடம் பெற்று தங்க பதக்கம் பெற்ற மாணவிகளுக்குதங்க பதக்கங்களை வழங்கி பேசியதாவது கிராமப்புற மக்களுக்கு தரமான சிறந்த கல்வியை கொடுக்கும் வகையில் இக்கல்வி நிறுவனம் கடந்த 33 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டு தற்போது ஆலமரமாக வளர்ந்து மாணவிகளின் வாழ்வில் விளக்கேற்றி உள்ளது பாராட்டத்தக்கது.

மாணவிகள்கல்லூரி பருவத்தை முடித்து வாழ்க்கை பருவத்திற்குள் அடி எடுத்து வைக்கின்றீர்கள் வாழ்க்கையில் சரி தாங்கள் எடுத்துக் கொண்ட வேலையிலும் சரி. நேர்மையாகவும் முழு முயற்சியுடனும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் செயல்பட்டு உழைத்தால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்.

இந்தியா வல்லரசாக மாற மாணவ சமுதாயத்தால்மட்டுமே முடியும்தற்போதுள்ள உலக அளவிலான வளர்ச்சி டிஜிட்டல் மையம் உலகப் பொருளாதாரக் கொள்கைவெளிநாட்டு வேலை வாய்ப்பு ஆகியவைகளில் மாணவர் சமுதாயம் மிகவும் கவனத்துடன் எதிர் கொள்ள வேண்டும். உங்களது பெற்றோர்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு உங்களிடம் உள்ளது என்று பேசினார்.பட்டமளிப்பு விழா ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.