• Sat. Jun 27th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

கோவில் திருப்பணிக்கு நிதி உதவி கொடுத்த முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி..,

ByK Kaliraj

Mar 23, 2025

கோவில் திருப்பணிக்கு நிதி உதவி கொடுத்த முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. விருதுநகர் மாவட்டம் சிவகாசி நாரணாபுரம் புதூர் ரோடு, 56வீடு காலனியில் அமைந்துள்ளது..

அருள்மிகு: ஸ்ரீசிவசக்தி ஆலயம் ஆகும். இக்கோவிலில் நூதனமாக எழுந்தருளியிருக்கும்
அருள்மிகு: ஸ்ரீகன்னிமூலகணபதி ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீசிதம்பரேஸ்வர் ஸ்ரீமுத்தாலம்மன் ஸ்ரீபைரவர் ஸ்ரீகுருபகவான் ஸ்ரீலிங்கோத்பவர் ஸ்ரீவிஸ்ணுதுர்க்கை அம்மன் என பரிவார மூர்த்திகள் கோயில் வளாகத்தில் அமைந்துள்ளன.திருக்கோவில்.
மஹா கும்பாபிஷேகம் விழா நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

திருப்பணி வேலைகளுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என கோவில் கமிட்டி சார்பில் முன்னாள் அமைச்சரும் அதிமுக மேற்கு மாவட்ட கழகச் செயலாளருமான கே. டி. ராஜேந்திர பாலாஜியிடம் நேரில் சந்தித்தனர். கோவிலில் திருப்பணி வேலைகள் நடைபெறுவது குறித்து கோவில் கமிட்டினர் தெரிவித்தனர். அதனை அடுத்து திருப்பணி வேலைகளுக்கு ரூ1இலட்சம் நிதியுதவி வழங்கினார் . திருப்பணி வேலைகள் சிறப்பாக நடத்துமாறும் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதாகவும் திருப்பணி குழு கமிட்டியினரிடம் கே .டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.