• Sat. Apr 20th, 2024

கந்து வட்டி கொடுமை -மெக்கானிக் உண்ணாவிரம்

வாங்கிய கடனுக்கு மேல் பணம் கேட்டு மிரட்டி கந்து வட்டி கொடுமை செய்துவரும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மெக்கானிக் பதாகை ஏந்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்ய வந்ததால் பரபரப்பு….
சேலம் மாவட்டம் எடப்பாடி வெள்ளாண்டிவலசு நைனாம்பட்டி பகுதியை சேர்ந்த மெக்கானிக் செல்வம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பதாகை ஒன்றை ஏந்தியவாறு ஆட்சியர் அலுவலகம் முன் உண்ணாவிரதம் மேற்கொள்ள வந்தபோது காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர் வளாகத்தின் முன்பு உண்ணாவிரதம் மேற்கொள்ள கூடாது என்றும் கோரிக்கையை மனுவாக வழங்க கோரி காவல்துறையினர் தெரிவித்து பதாகையை பெற்றுக்கொண்டனர்.


இது குறித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட வந்த மெக்கானிக் செல்வம் கூறும்போது அதே பகுதியை சேர்ந்த பாலாஜி மற்றும் ஆனந்தன் ஆகியோரிடம் எனது 3000 சதுர அடி நிலத்தை அடமானம் வைத்து தொழில் செய்வதற்காக 11 லட்ச ரூபாய் கடன் வாங்கினேன் அதற்கு கந்து வட்டியாக ஒரு மாதத்தில் ஒன்றரை லட்ச ரூபாய் கட்டியுள்ளேன். தற்போது பணத்தை திருப்பித் தருகிறேன் அடமானம் வைத்த பத்திரத்தை திருப்பித் தர கேட்டபோது எனது அண்ணன் கணபதி என்பவர் 24 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார் அதற்கு வட்டி 30 லட்சம் ரூபாய் ஆக மொத்தம் 54 லட்ச ரூபாய் மற்றும் நான் வாங்கிய 11 லட்சத்துக்கு வட்டியும் சேர்த்து தர வேண்டும் அதை தந்தால் பத்திரத்தை திருப்பி தருவதாக கூறி மிரட்டி வருகின்றனர் எனது அண்ணன் கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா தொற்றால் உயிரிழந்து விட்டார் தற்போது என்னிடம் பணம் கேட்டால் எவ்வாறு தர இயலும் அண்ணன் வாங்கிய கடனுக்கு எனது நிலத்தை அபகரித்துக் கொண்டு தர முடியாது என மிரட்டி வரும் கந்துவட்டி நபர் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தின் பத்திரத்தை மீட்டு தர வேண்டும் என தெரிவித்தார்
வாங்கிய கடன் 11 லட்சம் ரூபாய்க்கு அண்ணன் கட்ட வேண்டிய 50 லட்சமும் சேர்த்து அறுபது ஒரு லட்ச ரூபாய் கேட்கும் கந்துவட்டி கொடுமை செய்து வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மெக்கானிக் செல்வம் ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முடிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *