முசிறி பகுதியில் நாமக்கல் திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பழைய பேருந்து நிலையம் உள்ளது.இந்த பேருந்து நிலையத்தில் உள்ள கட்டிடங்கள் 35 வருடங்களுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்ததாகவும் தற்போது கட்டிடங்கள் பழுதடைந்து உள்ளதாகவும் எனவே இங்குள்ள 26 கடைகளையும் இடித்துவிட்டு வார சந்தை அமைக்கவும் அதே நேரத்தில் பழையபடி பேருந்துகள் உள்ளே சென்று வர ஏதுவாக வழிவகை செய்யவும் கடந்த 16ஆம் தேதி முசிறி ஆர்டிஓ மாதவன் தலைமையில் நடந்த அமைதி பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்பட்டது. இதனை அடுத்துஅங்கு கடை வைத்திருந்த கடை உரிமையாளர்கள் தங்கள் பொருட்களை எடுத்துக் கொண்டனர்.நேற்று பழைய பேருந்து நிலைய கடைகள் பொக்லின் இயந்திரம் மூலம் அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் பாதுகாப்புடன் இருக்கும் பணி தொடங்கியது.விரைவில் இங்கே புதிய வார சந்தை அமைக்கும் பணி தொடங்கும் என நகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.