• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி இன்று மாலை வெளியீடு

Byகாயத்ரி

Jan 26, 2022

தமிழகத்தில் ஆடி ஓய்ந்த ஊரக உள்ளாட்சித் தோர்தலுக்கு பின் தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.

இதனிடையே, கொரோனா 3-வது அலை தீவிரமாக உள்ளதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரி டாக்டர் நக்கீரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இதே கோரிக்கையுடன் டாக்டர் பாண்டியராஜ் உள்பட மேலும் பலர் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட், உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடையில்லை என நேற்று உத்தரவிட்டது. உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கு இருந்த தடை நீங்கியதால், தேர்தல் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

அந்த வகையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி இன்று மாலை 6.30 மணிக்கு அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தேர்தல் ஆணையர் பழனி குமார் உள்ளாட்சி தேர்தல் தேதி அட்டவணையை வெளியிட உள்ளார். கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடித்து தேர்தலை நடத்தலாம் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.