மதுரையில் நடைபெற்ற மனித நேய மக்கள் கட்சியின் மதுரை எழுச்சி பேரணி மற்றும் மாநாட்டின் தீர்மானங்களை விளக்கும் வகையில் தெருமுனை கூட்டங்கள் 1000 இடங்களில் நடத்து வேண்டும் என அக்கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களின் ஆணைகிணங்க மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் எம்.யாக்கூப் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாவட்டச் தலைவர் எஸ்.கே ஜாஹிர் உசேன் அவர்களின் ஆலோசனையின்படி செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் பம்மல் பகுதி 10 வது வார்டில் மாவட்ட துணைச் செயலாளர் சவுக்கத் அலி தலைமையில் பகுதி தலைவர் சாதிக் பாஷா வரவேற்புரையில் நடைபெற்றது,

இக்கூட்டத்தில் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் மற்றும் மாமன்ற உறுப்பினருமான தாம்பரம் எம் யாக்கூப், மற்றும் , மாநில அமைப்பு செயலாளர் பழனி ஃபாருக் தலைமைக் கழக பேச்சாளர் திருவை செய்யது, ஆகியோர் கலந்து கொண்டு தீர்மானம் விளக்க உரையாற்றினர். மேலும் இதில் பம்மல் பகுதியில் 30 ஆண்டு காலமாக வசித்து வரும் மக்களுக்கு வீட்டுப் பட்டா வழங்குமாறும் ,மற்றும், மூங்கில் ஏறி கஸ்தூரிபாய் தெருவில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் உள்ள கழிவறை பராமரிப்பு இன்றி இருப்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே தாம்பரம் மாநகராட்சி உடனடியாக அதனை சீர் செய்து தருமாறும், மற்றும் பம்மல் பகுதிகளை உள்ள அனைத்து சாலைகளையும் மழை நீர் செல்லும் கால்வாள்களையும் , சரி செய்ய வேண்டும் எனவும் நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் முக்கிய தீர்மானங்களாக எடுத்துக் கூறி சிறப்புரையாற்றினர்.

உடன் நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், பம்மல் பகுதி, பத்தாவது வார்டு நிர்வாகிகள், ஜமாத் நிர்வாகிகள் உட்பட ஆண்கள்,பெண்கள் என 200க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் இறுதியில் பகுதி செயலாளர் ஆட்டோ மஹ்பூல் பாய் நன்றி உரையாற்றினார்..