• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கவின் நடிப்பில் உருவான ‘டாடா’ படத்தின் அப்டேட் நாளை வெளியீடு

Byவிஷா

Jun 15, 2022

கவின் மற்றும் அபர்ணா தாஸ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அப்டேட் நாளை வெளியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர் கவின். பிக்பாஸ் மூலம் பிரபலமான கவின் தற்போது படங்களின் மூலம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறார். நட்புன்னா என்னனு தெரியுமா’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்த பிறகு லிப்ட் படத்தில் நடித்தார்.
த்ரில்லர் பாணியில் உருவான அந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் ஆகாஷ் வாணி என்ற வெப் சீரிஸில் நடித்தார். தற்போது நயன்தாரா தயாரிப்பில் ‘ஊர்குருவி’ என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். தற்போது அறிமுக இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் கவின் நடித்து வருகிறார். இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக மலையாள நடிகை அபர்ணா தாஸ் நடிக்கிறார். இவர்களுடன் ஹரிஷ், புகழ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ்.அம்பேத் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் துவக்கத்தில் தொடங்கியது. இதையடுத்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்திற்கு டாடா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் முக்கிய அப்டேட் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளனர்.