தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் பூட்டியே கிடக்கும் இறகு பந்து விளையாட்டரங்கம் மற்றும் உடற்பயிற்சி கூடத்தை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
2013 – 2014 ஆம் ஆண்டு ராஜ்யசபா உறுப்பினராக கனிமொழி இருந்தபோது அவருடைய எம்பி நிதியில், இறகுப் பந்து விளையாட்டரங்கம் சுமார் 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது.
இதே வளாகத்தில் 2015 – 2016 ஆம் உடற்பயிற்சி கூடம் சுமார் 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.
இறகு பந்து விளையாட்டரங்கம் மற்றும் உடற்பயிற்சி கூடத்துக்கு வரக்கூடிய பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக… தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 2016 – 2017 சுகாதார வளாகம் சுமார் 8 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. மேலும் சிறுவர் பூங்காவும் அமைக்கப்பட்டது.
பழனியில் செட்டிபட்டி பேரூராட்சி நிர்வாகத்தால் பல லட்சம் ரூபாய் செலவில் செய்யப்பட்ட இந்த அரசுத் திட்டங்கள் திறக்கப்படாமலேயே கிடப்பில் போட்டு வைக்கப்பட்டுள்ளது.
பூட்டி வைக்கப்பட்டுள்ள திட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என முன்னாள் திமுக ஒன்றிய பிரதிநிதி கார்த்திகேயன், தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், திமுக எம்பி கனிமொழி ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு சென்றிருந்தார்.
இதனைத் தொடர்ந்து பூட்டியே கிடக்கும் அரசு நலத்திட்டங்களை உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென எம்பி கனிமொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதற்கிடையே பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் முன்னாள் திமுக ஒன்றிய பிரதிநிதி கார்த்திகேயன் இதே கோரிக்கையை அதிகாரிகளிடம் மனுவாக அளிக்கச் சென்றார். ஆனால், அவரை மனு கொடுக்க விடாமல் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி தடுப்பதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.
கார்த்திகேயனை மனு கொடுக்கப்படாமல், குண்டர்களை வைத்து பேரூராட்சி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி மிரட்டி வெளியே அனுப்பி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.














; ?>)
; ?>)
; ?>)