• Fri. May 1st, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

கனமழை காரணமாக பல்கலைத் தேர்வுகள் ஒத்திவைப்பு..!

Byவிஷா

Dec 5, 2023

புயல் மற்றும் கனமழை காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் நேரடியாகவும் தொலைநிலைக் கல்வியிலும் பயிலும் மாணவர்களுக்கு டிசம்பர் ஒன்பதாம் தேதி சனிக்கிழமை வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
அதனைப் போலவே சென்னை பல்கலைக்கழகத்திலும் இளநிலை மற்றும் முதுநிலை உள்ளிட்ட மாணவர்களுக்கு டிசம்பர் எட்டாம் தேதி வரை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்வுகள் நடைபெறும் மாற்று தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.