• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் அ.தி.மு.க.கூட்டணிக்கு ஆதரவு

BySeenu

Apr 17, 2024

தி.மு.க.ஆட்சி அமைத்த பிறகு என்னவெல்லாம் சொன்னார்களோ அதற்கு மாறாக நடந்து கொண்டிருப்பதாக, ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் ஹைதர் அலி கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய ஹைதர் அலி..,

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியை ஆதரித்து இன்று களமாடி கொண்டிருப்பதாக குறிப்பட்ட அவர், பா.ஜ.க.வை விட்டு வெளியே வந்த பிறகு எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று முழுமையாக துண்டித்துக் கொண்டு வந்திருப்பதாக தெரிவித்தார்.
பிஜேபியை பொறுத்தவரை தமிழ்நாட்டில் தங்களை இரண்டாவது பெரிய கட்சியாக மாற்ற வேண்டும் என்று கருதுவதாக கூறிய அவர், ஆனால் இங்கு தொடர்ந்து திராவிட இயக்கங்கள் தான் ஆட்சி அமைத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.. பிஜேபி என்கிற நாசகார பாசிச கும்பல் தமிழ்நாட்டிலே வேரூன்றி விடக்கூடாது என்பதற்காக நாங்கள் அ.தி.மு.க. பி.ஜே.பி.யை விட்டு வெளியே வந்த உடனே அவர்களை சந்தித்து ஆதரவு கூறியதாக தெரிவித்தார்.
அ.தி.மு.க. தங்களுடைய பழைய தவறுகளை திருத்திக் கொண்டு அம்மையார் ஜெயலலிதா 1999 இல் அறிவித்தது போல இனிமேல் எங்களுக்கு ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று அறிவித்திருக்கிறார்கள் அதை கூடுமானவரை அவர்கள் கடைபிடித்து வருகிறார்கள் பல்வேறுபட்ட அழுத்தங்கள் அவர்களுக்கு இருந்தாலும் அந்த அழுத்தங்களை மீறி அவருடைய இன்றைக்கு தனித்தன்மையோடு இன்றைக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஆகவே தான் ஐக்கிய முஸ்லிம் கழகம் அ.தி.மு.க. கூட்டணியை ஆதரிப்பதாக அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் தி.மு.க.ஆட்சி அமைத்த பிறகு,என்னவெல்லாம் சொன்னார்களோ அதற்கு மாறாக நடந்து கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.. திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மின்சார கட்டணம் மாதா மாதம் வசூலிக்கப்படுவதாக கூறிய உறுதிமொழியை இது வரை நிறைவேற்றவில்லை எனவும்,அதே போல வீட்டு வரியை பலமடங்கு உயர்த்தியுள்ளதால் சாதாரண மக்கள் பாதிக்கபட்டு வருவதாக கூறினார்.
அதுபோன்று பால் விலை ஏற்றம், நாங்க வந்தால் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையையும் டீசல் விலை மானியம் கொடுப்போம் என்பன போன்ற பல திட்டங்களை அறிவித்தார்கள் ஆனால் எதையும் தி.மு.க.அரசு இது வரை செய்யவில்லை என குற்றம் சாட்டினார். எனவே பா.ஜ.க.மீது அ.தி.மு.க.வின் நிலையான எதிர்ப்பை வரவேற்று இந்த நாடாளுமன்ற தேர்தலி்ல் எங்களது ஆதரவை தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்…
இந்த சந்தப்பின் போது ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஹாலிதீன்,செய்யாறு அப்பாஸ், ரஃபி, நசீர், வசீர் அகமத், பாபு என்கிற ஜாஹிர், நிஷாத் ,சித்திக் ,இப்ராஹிம், வெள்ளலூர் சித்தீக், நியாஸ், முகமது ஆரிப் ஆகியோர் கலந்து கொண்டனர்.