• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

நவ.7-ந்தேதி ரஷியா செல்கிறார் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

ByA.Tamilselvan

Nov 4, 2022

ரஷ்யா – உக்ரைன் போர் தொடரும் நிலையில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் வரும் நவம்பர் 7ம் தேதி ரஷியா செல்கிறார்.
மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், 2 நாள் பயணமாக ரஷியா செல்கிறார். வருகிற 7 மற்றும் 8-ந்தேதிகளில் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர் ரஷியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதில் முக்கியமாக ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜெய் லவ்ரோவுடன் இருதரப்பு உறவுகள் குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதில் பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் இருவரும் விவாதிக்கின்றனர். ரஷியா-உக்ரைன் போருக்கு மத்தியில் ஜெய்சங்கரின் இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் இந்த போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 4 முறை இரு தலைவர்களும் சந்தித்து பேசியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.