• Fri. Mar 29th, 2024

நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கருத்தரங்கு

கடந்த வெள்ளிக்கிழமை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு, நீரழிவு நோய் பற்றிய கருத்தரங்கு சிறப்பாக நடைபெற்றது.

கருத்தரங்கு காலை 9 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி வரை நடைபெற்றது. அரசு மருத்துவமனை மருத்துவர்கள், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், இந்திய மருத்துவ சங்கம் மருத்துவர்கள் , குறிப்பாக தென்காசி மாவட்ட மூத்த பொது நலமருத்துவர்கள் என சுமார் 123 மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார். கருத்தரங்கில் கலந்து சிறப்பித்த தென்காசி மாவட்ட மூத்த மருத்துவர்கள் மருத்துவர் சுப்பிரமணியம், மருத்துவர் சோமசுந்தரம், மருத்துவர் கணேசன், வேதமூர்த்தி, மருத்துவர் பாலாசிங், மருத்துவர் இஸ்மாயில், மருத்துவர் சூரியகாந்தி, மருத்துவர் சுகந்த குமாரி, மருத்துவர் முத்தையா, மருத்துவர் ராமகிருஷ்ணன், மருத்துவர் முகைதீன் அகமது ஆகியோரை தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் வெங்கட்டரங்கன், துணை இயக்குனர் சுகாதாரம் மருத்துவ அனிதா, துணை இயக்குனர் காசநோய் மருத்துவர் வெள்ளைச்சாமி ஆகியோர் கலந்து சிறப்புரையாற்றினார்கள்.

கருத்தரங்கில் மருத்துவர் அகத்தியன், மருத்துவர் மல்லிகா, மருத்துவர் மாரிமுத்து, புளியங்குடி அரசு மருத்துவர் பிரியதர்ஷினி, மருத்துவர் புனிதவதி, மருத்துவர் ராஜலட்சுமி, மருத்துவர் கார்த்திக் பற்றிய சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தினார்கள். கருத்தரங்கில் மருத்துவமனை கண்காணிப்பாளரும் அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட தலைவரும், மாநில செயலாளருமான (DMS wing) மருத்துவர் ஜெஸ்லின் அவர்கள், அனைத்து பேச்சாளர்களையும் கலந்துகொண்ட அரசு டாக்டர்கள் சங்க உறுப்பினர்களையும் வாழ்த்திப் பேசினார். நிகழ்ச்சியில் அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட செயலாளர் (DPH) மருத்துவர் முஹம்மது இப்ராஹிம் கலந்துகொண்டு சிறப்பித்தார் . கருத்தரங்க நிகழ்ச்சிகளை மருத்துவர் கோபிகா, மருத்துவர் ஜெரின் இருவரும் இணைந்து தொகுத்து வழங்கினர். தோல் நோய் மருத்துவ நிபுணர் மருத்துவர் கோபிகா அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்த மருத்துவமனை நிர்வாகத்திற்கும், அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று நடத்திய மருத்துவர் லதா, மருத்துவர் மல்லிகா, மருத்துவர் கார்த்திக் அவர்களுக்கும், பேச்சாளர்கள் அனைவருக்கும், கலந்து கொண்ட மருத்துவர்கள் அனைவருக்கும், சுமித் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றிகளை கூறிக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *