

மதுரையில் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். அங்குள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாநகர் நேரு நகர் பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்சர் இருசக்கர வாகனம் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது. இதனை அறிந்த மோகன் இருசக்கர வாகனம் திருடு போனது குறித்து, மதுரை எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் அவரது இருசக்கர வாகனத்தை மங்கி குல்லா அணிந்த மர்ம நபர்கள் திருடி செல்வது போன்ற காட்சிகள் அந்த பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. தொடர்ந்து ஆதாரங்களை கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

