• Mon. Nov 24th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தொடர் திருட்டில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது..,

ByS.Ariyanayagam

Nov 24, 2025

திண்டுக்கல் நகர் பகுதியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது – 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டுக்கல் நகர் பகுதியில் தொடர் இரு சக்கர வாகன திருட்டு சம்பவம் நடைபெற்றது தொடர்பாக நகர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட எஸ்பி.பிரதீப் உத்தரவின் பேரில் நகர் DSP.கார்த்திக் மேற்பார்வையில் நகர் வடக்கு காவல் நிலைய (பொறுப்பு) ஆய்வாளர் ராஜசேகர் தலைமையில் சார்பு ஆய்வாளர் சரத்குமார் நகர் குற்றத்தடுப்பு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் காவலர்கள் முகமதுஅலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட சர்க்கரை முகமது(23), பேகம்பூர், கார்த்திகேயன்(24) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 7 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.