
திருப்பரங்குன்றத்தில் நின்ற வேன்மீது மற்றொரு வேன் மோதியதில் பெண் உள்பட இரண்டு பேர் பலியானார்கள்.
தென்காசியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி ஜெயஸ்ரீ 50. இவரும் இவரது உறவினர்கள் சண்முகராஜா 40, கிருஷ்ணன் 38, வைரமுத்து 29, செந்தில் இசைக்கி 28 ஆகியோர் கோயம்புத்தூருக்கு செனறிருந்தனர். பின்னர் நள்ளிரவு சொந்த ஊருக்கு திரும்பினர். அவர்கள் சென்ற வேன் திருப்பரங்குன்றம் மொட்டமலை பாரதி நகர் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது சாலை ஓரம் நின்றுகொண்டிருந்த மற்றொரு வேன்மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்தானது. சம்பவம் குறித்த தகவல் அறிந்த மதுரை டவுன் மற்றும் திருப்பரங்குன்றம் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த நபர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். வேனில் பயணம் செய்த ஜெயசிரியும் சண்முகராஜாவும் பலியானார்கள். கிருஷ்ணன், வைரமுத்து, செந்தில் இசக்கி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்தவிபத்து குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
