
கோவை பேரூர் அருகே உள்ள தீத்திபாளையம் விக்னேஸ்வரன் தனது குடும்பத்துடன் தீத்திபாளையத்தில் வசித்து வருகிறார். மழையின் காரணமாக தனது வீட்டின் பின்புறத்தில் செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார்.

மேலும் மழை நீர் வெளியேற அலுமினிய சீட் பொருத்தப்பட்டு இருந்தது. மழை காரணமாக சீட்டில் நீர் வடிந்தது அந்த சீட்டில் இருந்து அவர் வீட்டிற்கு வழங்கப்பட்டு இருந்த மின்சாரம் பாய்ந்து உள்ளது. அதை அறியாத விக்னேஸ்வரன் அந்த சீட்டை தொட அவர் மீது மின்சாரம் பாய்ந்து மயங்கி கீழே விழுந்தார். அருகில் இருந்த உறவினர் நாகராஜ் மற்றும் அக்கம், பக்கத்தினர் மின்சாரம் தாக்கியது. தெரியாமல் விக்னேஸ்வரன் மயங்கி விட்டதாக எண்ணி உடனே மாதம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து விக்னேஸ்வரன் உறவினரான நாகராஜ் மற்றவர்களிடம் அந்த இடத்தில் சம்பவத்தைப் பற்றி விளக்கிக் கொண்டு இருந்த போது அவரும் அதே சிமெண்ட் சீட்டை தவறுதலாக தொட்டதால் அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்பு தான் அங்கு மின்சாரம் கசிவு ஏற்பட்டு இருப்பது அங்கு இருந்தவர்களுக்கு தெரியவந்தது.

இதுகுறித்து பேரூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் கோவை தீத்திபாளையம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
