• Wed. May 8th, 2024

கள்ளக்குறிச்சி வன்முறையில் திண்டுக்கல்லில் மேலும் இருவர் கைது..

Byகாயத்ரி

Jul 20, 2022

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள கனியமூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மர்ம முறையில் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிரவலைகளை ஏற்படுத்தி வருகிறது. இது சமூகவலைதளத்தில் justice for srimathi என்ற ஹஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறியதை அவரது பெற்றோர் ஏற்கவில்லை. மாணவி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தின் போது வன்முறை சம்பவங்கள் பெரிய அளவில் அரங்கேறியது. வன்முறையில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை தீவிரமடைந்துள்ளது. மேலும் மாணவியின் மரணம் குறித்து பள்ளி தாளாளர் ரவிக்குமார், முதல்வர் சிவசங்கரன், செயலாளர் சாந்தி, வேதியல் ஆசிரியர் ஹரிப்ரியா, கணித ஆசிரியர் கிருத்திகா அகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி போராட்டத்திற்கு வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் அழைப்பு விடுத்தவர்களை குறிவைத்து கைது நடவடிக்கை முடக்கி விடப்பட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்ட பழனி அடிவாரத்தை சேர்ந்த டீக்கடை உரிமையாளர் கோகுல்(23) கைது செய்யப்பட்டுள்ளார். இவர் வாட்ஸ் அப் குழு அமைத்து கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இவர் தற்போது பழனி நகர கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதனை போல திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துரில் தனியார் பாதையில் முக்கிய பதவியில் இருக்கும் செல்வமணி என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் வாட்ஸ் அப் குழுவில் வன்முறையை தூண்டும் வகையில் பதிவு செய்ததாக வேடசந்தூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *