• Mon. Apr 29th, 2024

கைதிகள் இருவர், சேலம் மத்திய சிறையில் உண்ணாவிரதம்…

குமரி மாவட்டத்தை மட்டும் அல்ல தமிழகத்தையே அதிர்ச்சியடைய செய்த களியக்காவிளை மாநில எல்லை பகுதியில் உள்ள காவல்துறை சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் என்பவர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக ஆய்வு செய்ய அன்றைய தமிழக டிஜிபி சங்கர் ஜூவால் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்ததுடன்,சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை துப்பாக்கியால் சுட்டு கொன்ற கொலையாளிகளை அந்த பகுதியில் இருந்த கேமராக்கள் மூலம் அடையாளம் கண்டதோடு, கொலையாளிகளான திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த அப்துல் சமீம்(34), கோட்டாறு பகுதியை சேர்ந்த தவுவிக்(32) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்ட போது, அவர் பணி ஓய்வு பெறுவதற்கு சில மாதங்களே இருந்த நிலையில், காவல்துறையில் பணியாற்றிய வில்சன் அவரது பணியில் ஒரு அமைதியான காவல்துறை அதிகாரியாகவே செயல் பட்டவரை துப்பாக்கியால் சுட்டு கொல்வதற்கு என்ன காரணம் என்று விடை தெரியாத கேள்வியே இன்று வரை தொத்தி நிற்கிறது.?

அ தி மு க ஆட்சி காலத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் மரணமடைந்த உதவி ஆய்வாளர் வில்சனுக்கு ரூ.ஒருகோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், ராஜேஷ் குமார், மார்த்தாண்டம் பகுதியில் உள்ள வில்சன் வீட்டின் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பாஜகவும் கலந்து கொண்டதுடன், ரூ. ஒரு கோடி நிவாரணம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அன்றைய அதிமுக அரசு துணை ஆய்வாளர் வில்சனுக்கு ரூ. ஒரு கோடி – யை நிவாரணம் வழங்கியது.

வில்சனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த அப்துல் சமீம், நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்த தவுபிக் இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் தற்போது உயர் பாதுகாப்பு பிரிவில் தனித்தனி அறையில் உள்ளனர்.

குமரி கைதிகள் இருவரும் நேற்று (அக்டோபர்_30) காலை முதல் சிறை உணவை உண்ண மறுத்து உண்ணாவிரதம் மேற்கொண்டு வருவதாகவும், சேலம் சிறை சூப்பிரண்டு வினோத் (பொறுப்பு) மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய போது, குமரி கைதிகள் இருவரும் அதிகாரிகளிடம், சிறையில் கூட்டு தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும். மற்ற கைதிகளை சந்தித்து பேச அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருப்பதாக தெரிவித்த நிலையில். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில், சிறை சூப்பிரண்டு வினோத் இது குறித்து தெரிவித்தது.
சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கும் அப்துல் சமீம், தவுபிக் ஆகியோர் சிறையில், சிறையில் வழங்கும் உணவை உண்ண மாட்டோம் அவர்கள் இருவருக்கும் கூட்டுதொழுகைக்கு அனுமதி வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர். சிறை உணவை வாங்க மறுக்கும் குமரியை சேர்ந்த இரண்டு கைதிகளும். தண்ணீர் குடிப்பது மற்றும் சிறையில் இவர்கள் இருவரை சிறையில் அனுமதி பெற்று பார்க்கும் நண்பர்கள், உறவினர்கள் கொடுத்த பழங்கள் உள்ளிட்டவைகளை சாப்பிடுவதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *