• Sat. May 23rd, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

தியாகிகள் ஸ்தூபிக்கு விஜய்வசந்த் எம். பி வீரவணக்கம்…

கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த நவம்பர் 1 தேதியான இன்று (01-11-2023) குமரி எல்லை போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. புதுக்கடை பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பின்னர்  எல்லை போராட்டத்தின் போது துப்பாக்கி சூட்டில் பலியான மாங்காடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தியாகிகளின் நினைவு ஸ்தூபிக்கு காங்கிரஸ் மற்றும் திமுக நிர்வாகிகளுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங், காங்கிரஸ் மீனவரணி மாநில தலைவர் ஜோர்தான், மகிளா காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவி ஷர்மிளா ஏஞ்சல், வட்டார தலைவர் விஜயகுமார், மங்காடு ஊராட்சி காங்கிரஸ் தலைவர் கிறிஸ்டோபர்,  திமுக அவைத்தலைவர் மரியசிசுகுமார், திமுக ஒன்றிய செயலாளர் மோகன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஆதிலிங்கபெருமாள் மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், வட்டார உறுப்பினர்கள், பேரூராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.