



சாணார்பட்டி அருகே அணையில் மூழ்கி இரு சிறுமிகள் பெற்றோர் கண் முன்னே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே சோழகுளத்துப்பட்டி சேர்ந்தவர் தங்கராசு இவர் ரெட்டியார்சத்திரம் பகுதியில் உள்ள கல்குவாரியில் கூலிதொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் இன்று விடுமுறை என்பதால் மனைவி வேலுத்தாய் மகள்கள் பேபிஸ்ரீ(17), நாகசக்தி(12) மற்றும் உறவுக்கார 2 சிறுமிகளுடன் ஆகியோருடன் சிறுமலை அடிவாரத்தில் உள்ள அஞ்சுகுழிபட்டி சங்கிலியான் கோவில் தடுப்பணைக்கு துணி துவைப்பதற்காக அழைத்து சென்றுள்ளார். தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக இவரது மகள்கள் பேபிஸ்ரீ, நாகசக்தி மற்றும் உறவுக்கார சிறுமிகள் ஆகிய நால்வரும் நீரின் ஆழத்தில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்க கணவன், மனைவி இருவரும் முயன்ற நிலையில் உறவுக்கார சிறுமிகள் இருவரையும் மீட்ட நிலையில் பேபிஸ்ரீ, நாகசக்கி ஆகிய இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வரைந்த சாணார்பட்டி காவல்துறையினர் உயிரிழந்த சகோதரிகளின் உடல்களை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து சாணார்பட்டி காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் பெற்றோர் கண் முன்னே தடுப்பணையில் மூழ்கி இரு சிறுமிகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பேபிஸ்ரீ இந்த ஆண்டுதான் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளார். நாகசக்தி ஆறாம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .


