• Fri. Jul 10th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

அதிமுக பாஜக கூட்டணி நம்பிக்கை கூட்டணியாக இருக்கும் ஜி.கே வாசன் பேச்சு !

ByVasanth Siddharthan

Apr 13, 2025

திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் அருகே கவரப்பட்டி கிராமத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகி இல்ல விழாவிற்கு வருகை தந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் 

தமிழக மக்கள் எதிர்பார்த்த கூட்டணி. திமுக அரசை அகற்ற வேண்டும் அதற்கு உறுதியான கூட்டணி தேவை என்ற நிலையில் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் மத்தியில் பாஜக மாநிலத்தில் அதிமுக என்ற கூட்டணி அறிவிப்பு தமிழக வாக்காளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிவு. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத அரசு இந்த திமுக அரசு. மக்களை ஏமாற்றும் அரசாக திமுக உள்ளது. மாற்றம் உறுதி என்று மக்கள் தீர்மானித்து இருக்கிறார்கள் அதற்கு அதிமுக பாஜக கூட்டணி நம்பிக்கை உரிய கூட்டணியாக முதல் கூட்டணியாக வரும் நாட்களில் வலம் வரும்..

ஊழல் கூட்டணி என முதல்வர் விமர்சனம் செய்துள்ளாரே என்ற கேள்விக்கு , மக்களின் வரிப்பணத்தை டாஸ்மாக் மூலம் தவறாக கையாண்டு டாஸ்மாக் ஊழல் நடந்தது வெட்ட வெளிச்சமாக விசாரணை நடந்து வருகிறது. 

அமைச்சர் பொன்முடி பேச்சு, பொறுப்பற்ற முறையில் அமைச்சர் பேசுவதும் அதை ஆட்சியாளர்கள் வேடிக்கை பார்ப்பதும் வெட்கக்கேடு. ஆபாச வார்த்தைகள் காதில் கேட்க முடியாத வார்த்தைகள். கட்சி பொறுப்பில் நீக்கம் செய்யப்பட்டு அமைச்சராக நீடிப்பார் என்றால் இதுதான் அரசின் மாடலா என கேட்க விரும்புகிறோம். உடனடியாக அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும். 

த.மா.க வெற்றி கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணி வெற்றி பெறும். சட்டமன்றத் தேர்தலுக்கு தங்களை பலப்படுத்திக் கொண்டிருக்கிறோம். தொய்வுள்ள இடத்தில் அடையாளம் கண்டு அந்த இடங்களில் வலுப்படுத்தி கூட்டணிக்கு முக்கிய கட்சியாக செயல்பட உறுதி கொண்டு இன்னும் 6 மாதம் செயல்பட இருக்கிறோம். ஒத்த கருத்தோடு கூட்டணி தேர்தலை சந்திக்கும் என பேசினார். 

குறிப்பு – செய்தியாளர் சந்திப்பின் போது எத்தனை சீட் கூட்டணியில் கேட்க உள்ளீர்கள் என கேள்வி எழுப்பினர். அதற்கு அருகில் அமர்ந்து இருந்த முன்னாள் எம்.பி சித்தன் 10 விரல்களை காண்பித்தார். அப்போது சித்தனிடம் அவங்க 100 என போட்டு விடுவார்கள் என ஜி.கே வாசன் சிரிப்பலையை ஏற்படுத்தினார்.