• Sat. Jun 27th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

தனியார் பேருந்து மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் பலி..,

ByP.Thangapandi

May 11, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பூதிப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் யோகமாயன், மனோஜ் இருவரும் தனித்தனி கல்லூரிகளில் பயின்று வரும் சூழலில்.,

சேடபட்டி அருகே உள்ள தனியார் இராணுவ பயிற்சி மையத்தில் சேர தனது நண்பர் அழைப்பின் பேரில் இருசக்கர வாகனத்தில் சென்ற யோகமாயன், மனோஜ் மீது சின்னக்கட்டளை பல்க் அருகாமையில் பேரையூரிலிருந்து உசிலம்பட்டி நோக்கி வந்த தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.,

இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற யோகமாயன், மனோஜ் என்ற இரு கல்லூரி மாணவர்களும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.,

தகவலறிந்து விரைந்து வந்த சேடபட்டி காவல் நிலைய போலீசார் விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.,

சாலை விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் பலியான சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.,