• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கர்நாடாகாவில் ஒரே உருவ ஒற்றுமை கொண்ட இரு வேட்பாளர்கள்..!

Byவிஷா

Apr 27, 2023

கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்கள் ஒரே மாதிரி உருவ ஒற்றுமையுடன் இருப்பதால் வாக்காளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதில் ராய்ச்சூர் மாவட்டம் மாஸ்கி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. பிரதாப் கவுடா பட்டீல் (வயது 68) போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பசவனகவுடா துர்விகால் களமிறங்கியுள்ளார். மேலும் இதே தொகுதியில் ஈஷப்பா என்பவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவர் தனது பெயரையும் ஈஷப்பா கவுடா பட்டீல் என மாற்றியுள்ளார். இவர் பிரதாப் கவுடா பட்டீல் போல் தோற்றத்தில் நெற்றியில் திருநீரு பூசி இருப்பதுடன் அவரை போல் மீசையும் வைத்துள்ளார். பிரதாப் கவுடா பட்டீலை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சி அவரை போல் முகதோற்றம் கொண்ட ஈஷப்பாவை இறக்கிவிட்டு இருப்பதாக பா.ஜனதாவினர் குற்றம்சாட்டியுள்ளனர். ஒரே தோற்றம் கொண்ட 2 வேட்பாளர்களால் வாக்காளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.