• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

சிலிண்டர்கள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்கு ஈடுபட்ட இருவர் கைது..,

ByKalamegam Viswanathan

Mar 13, 2026

மதுரையில் சில பகுதிகளில் உணவுப் பொருட்கள் கடத்தல் மற்றும் மானிய விலை LPG சிலிண்டர் பதுக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது

அதன்படி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையினர் மதுரை கோவில்பாப்பாகுடி ஆத்தாளை பகுதியை சேர்ந்த பழனி என்பவரின் வீட்டின் அருகே காலியிடத்தில் சோதனை மேற்கொண்டதில் கள்ளச்சந்தையில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 மானிய விலை சிலிண்டர்கள் மற்றும் 109 வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்கள் உட்பட மொத்தம் 209 சிலிண்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டன

இதேபோன்று கோவில்பாப்பாகுடி ஆனந்தம் நகரை சேர்ந்த மதன்குமார் (27) என்பரின் வீட்டருகே சோதனை செய்தபோது சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 63 மானிய விலை சிலிண்டர்கள் மற்றும் 126 வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்கள் உட்பட மொத்தம் 189 சிலிண்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டது

இரு இடங்களிலும் 398 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அத்தியாவசியப் பண்டங்கள் சட்டத்தின் கீழ் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.

இதனை தொடர்ந்து இருவர் மீதும் மானிய விலை சிலிண்டர் பதுக்கல் தொடர்பாக கள்ளச்சந்தை தடுப்புக் காவல் ( குண்டர்) சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக மதுரை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் அவர்களால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், மானிய விலை சிலிண்டர் பதுக்கலில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை மதுரை மண்டலத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.