• Wed. Nov 5th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

யூடியூப் பார்த்து வெடிமருந்து தயாரிப்பு காட்டுப்பன்றியை வேட்டையாடிய இருவர் கைது

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வனச்சரக அலுவலகத்திற்கு தெற்குப் புறமுள்ள காப்புக்காடு, சந்த மலைப் பகுதியில் நேற்று காலை வனக்காவலர்கள் வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த பகுதியில் சாக்கு மூட்டையை தூக்கிக் கொண்டு இரு நபர்கள் வந்துள்ளனர். வனக் காவலர்களை பார்த்ததும் இருவரும் பயந்து ஓடி உள்ளனர். இதனையடுத்து வனக் காவலர்கள் அவர்களை மடக்கி பிடித்து, சாக்கு பையை கைப்பற்றி பார்த்ததில், அதில் 300 கிலோவிற்கு மேல் உள்ள இறந்த காட்டுப் பன்றியின் உடலும் மற்றும் வெடிமருந்தும் இருப்பதை கண்டறிந்து இருவரையும் வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் இவர்கள் ஆண்டிபட்டி வட்டம் பாலக்கோம்பையில் உள்ள காந்தி என்பவர் மகன் சிவக்குமார் (26) ,ஏத்தக் கோவில் பெருமாள் மகன் வேல்சாமி ( 29) தெரியவந்தது. இந்த இருவரும் தொடர்ந்து இதே போன்று வனவிலங்கு வேட்டையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது .

இதனையடுத்து வனச்சரகர் நாகராஜ்,வனவர் விக்னேஷ் ஆகியோர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர், யூடியூப் பார்த்து வெடி மருந்து தயார் செய்து காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடிய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.