பிரபல டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசனின் தாயார் பிரேமா சீனிவாசன் காலமானார். அவருக்கு வயது 90. அவருடைய உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் நிறுவனர் சுந்தரம் அய்யங்காரின் இளைய மகன் டி.எஸ்.சீனிவாசன். இவருடைய மனைவி பிரேமா. இந்த்த தம்பதிக்கு வேணு சீனிவாசன் மற்றும் கோபால் சீனிவாசன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில், வேணு சீனிவாசன் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.
கோபால் சீனிவாசன், டிவிஎஸ் கேபிடல் நிதி நிறுவனத்தின் தலைவராக உள்ளார். இவர்களின் தாயார் பிரேமா, உடல்நலக் குறைவு காரணமாக நேற்று மாலை காலமானார். அவருடைய உடல் சென்னை அடையாறு க்ளப் கேட் சாலையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. வேணு சீனிவாசன் தாயார் மறைவு குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன், டிவிஎஸ் நிறுவன தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது தாயார் பிரேமா சீனிவாசன் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், டிவிஎஸ் குடும்பத்திற்கு தனது ஆறுதலை தெரிவித்தார்.
டிவிஎஸ் நிறுவன தலைவர் தாயார் காலமானார்
