• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

எடப்பாடிக்குத்தான் பின்னடைவு என டிடிவி தினகரன் பேட்டி.,

ByP.Thangapandi

Sep 6, 2025

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் பி.கே.மூக்கையாத்தேவர் – ன் 46 வது நினைவு நாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.,

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன்,

செங்கோட்டையன் மூத்த தலைவர் அவர் 1977 ஆம் ஆண்டு முதல் கிளைச் செயலாளராக அதிமுக கட்சியில் இருந்து விசுவாசத்தோடு உழைத்து வந்தவர்., கிளை செயலாளராக இருந்து மாவட்ட செயலாளராக இருந்து சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்த மூத்த தலைவர்.

1987இல் இரண்டு அணியாக பிரிந்த போது அந்த மாவட்டத்தின் அண்ணன் முத்துசாமியுடன் நான்கு பேர் சென்றார்கள். செங்கோட்டையன் அவர்களிடம் 7 சட்டமன்ற உறுப்பினர்கள் வந்தனர்.

எப்போதுமே ஏற்றத்தாழ்வு இருந்த போதும் அம்மாவின் விசுவாசமாக இருந்தவர் . அப்படி இருந்த சிறந்த ஒரு மூத்த நிர்வாகியின் கோரிக்கையாக மட்டுமில்லாமல் தொண்டர்களின் கோரிக்கையிலே அவர் கூறியுள்ளார்.

கெடுவான் கேடு நினைப்பான், வீனாசையே விபரீத புத்தி என்பார்களே அதை போல ஒரு டிரையல் நடத்தியுள்ளனர். இது செங்கோட்டையனுக்கு பின்னடைவு அல்ல எடப்பாடிக்குத்தான் பின்னடைவு., என பேட்டியளித்தார்.