• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

திரிபுரா, நாகாலாந்து பாஜக முன்னிலை..மேகாலயாவில் பின்னடைவு

ByA.Tamilselvan

Mar 2, 2023

திரிபுரா ,பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. அதே நேரத்தில் மேகாலயாவில் சற்றே பின்தங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 18-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 3 மாநில சட்டசபை தேர்தலின் முடிவுகள் இன்று மாலைக்குள் அறிவிக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 3 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பது இன்று மாலை தெரிய வரும். இந்நிலையில், 3 மாநில தேர்தல்- திரிபுரா, நாகலாந்தில் பாஜக முன்னிலை என தகவல் வெளியாகியுள்ளது.அதே நேரத்தில் மேகாலயாவில் ஆளும் தேசிய மக்கள் கட்சி 10-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக பின்தங்கியுள்ளது. பாஜகவுடன் கூட்டணி வைத்த என்.பி.பி கட்சி முன்னிலை பெற்றுள்ளது.