அருணாச்சலா பிரதேசத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த மேஜர் ஜெயந்த் உடல் இரவு.12.20 மணியளவில் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. அவரது உடலுக்கு அமைச்சர்கள் உட்பட பலரும் மரியாதை செலுத்தினர்.
மதுரை விமான நிலையம் வந்தடைந்த மேஜர் ஜெயந்த் உடலுக்கு சூலூர் 35வது துப்பாக்கி படை பிரிவு மேஜர் சேகர் பாணி கிரேகி தலைமையில் 21 வீரர்க்ள் மேஜர் ஜெயந்தின் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.
தமிழக அரசு சார்பில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.அருணாசல பிரதேசம் மாண்டல பகுதியில் நேற்று நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த இராணுவ மேஜர் ஜெயந்தின் உடல் தலைநகர் திசாப்பூரில் அஞ்சலி செலுத்தப்பட்டு விமானப்படை விமானம் மூலம் லெப்ட்டினன்ட் கர்னல் ரெட்டி உடல் 9.40 மணிக்கு ஐதாராபாத் விமான நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.பின்னர் மேஜர் ஜெயந்த் உடலுடன் இரவு 10.20 மணிக்கு ஜதராபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு இரவு 12.. 20 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. மதுரை விமானநிலையத்தில் சூலூர் 35வது ரைபில் ரெஜிமண்ட் ( துப்பாக்கி படை)யினர் மேஜர் ஜெயந்த் உடலை இறுதி அஞ்சலி செலுத்த எடுத்து வந்தனர். தமிழகஅரசு சார்பில் வணிகவரித்துறை அமைச்சர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.கலெக்டர் அனிஷ்சேகர் உள்ளிட்ட பலரும் மரியாதை செலுத்தினர்.
இறுதி அஞ்சலிக்கு பின் மேஜர் ஜெயந்த் உடல் மதுரை அரசு இராஜாஜி மருத்துவ மனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. மீண்டும் இன்று காலை 7 மணியளவில் ஆம்புலன்ஸ் மூலம் பெரியகுளம் அருகேயுள்ள ஜெயமங்களம் கொண்டு செல்லப்பட்டது.