முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் அவரது திருவுருவ சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 104வது பிறந்தநாள் நவம்பர் 19 ஆம் தேதியான இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினரால் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் அமைந்துள்ள இந்திராகாந்தியின் திருவுருவச்சிலைக்கு குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் உள்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இதேப்போன்று மாவட்டம் முழுவதிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் கிளை அலுவலகங்களில் இந்திரா காந்தியின் உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு, அந்தந்த பகுதி நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.