தமிழகத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் காட்டுத்தீ அபாயம் காரணமாக ஏப்ரல் 15-ம் தேதி வரை டிரெக்கிங்குக்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இயற்கை மண்டல பாதுகாப்பு, காட்டுத்தீ மற்றும் நிலைத்தன்மை ஆகிய காரணங்களுக்காக, ஏப்ரல் 15-ம் தேதி வரை மலையேற்ற சுற்றுலாவிற்கு வனத்துறை தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சுற்றுலா துறை சார்பாக, இயற்கை எழில் சூழ்ந்த மலைகள் மற்றும் வனப்பகுதிகளில் டிரெக்கிங் பயணம் கடந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் பலர் பயணம் பேர்கொண்ட நிலையில் தற்போது வனத்துறை தடை விதித்துள்ளது. தமிழகத்தில் இந்த திட்டம் கோவை, நீலகிரி, தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி, விருதுநகர், கன்னியாகுமரி, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி உள்ளிட்ட 40 இடங்களில் செயல்பட்டு வருகிறது.