• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கொரோனா தடுப்பூசிக்கு பதில் வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தப்பட்ட அதிர்ச்சி

Byமதி

Sep 29, 2021

நாடு முழுவதும் கொரோனாவிற்க்கு எதிரான தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அந்தவகையில், மகாராஷ்டிரா மாநிலம் தானே நகராட்சிக்கு உட்பட்ட கல்வா என்ற பகுதியில் ஆட்கோனேஷ்வர் சுகாதார மையத்தில், தடுப்பூசி முகாம் செயல்பட்டு வருகிறது. மேலும், இங்கு பல்வேறு நோய்களுக்கு மருந்துகளும் அளிக்கப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் ராஜ்குமார் யாதவ் என்பவர் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள சென்றிருக்கிறார். அப்போது அங்கு ஒரு இடத்தில் நீண்ட வரிசை நின்றிருப்பதை பார்த்த அவர், அது கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான வரிசை என நினைத்து நின்றுள்ளார். அப்போது, செவிலியர் ஒருவர் அவருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளார்.

அதன்பிறகுதான் அவருக்கு தெரிய வந்துள்ளது, அந்த வரிசை வெறிநாய்க்கடி எதிர்ப்பு தடுப்பூசி செலுத்த இருந்தவர்கள் என்று. இதனால் யாதவ் அதிர்ச்சி அடைந்தார். இந்தத் தகவல் மேல் அதிகாரிகளுக்குத் தெரியவர, கவனக்குறைவாக செயல்பட்ட செவிலியரை சஸ்பெண்ட் செய்துள்ளனர். மேலும், தடுப்பூசி செலுத்தப்பட்ட யாதவை கண்காணித்து வருகின்றனர்.