பாளையங்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள லாரா பாரடைஸ் ஹோட்டலில் சிஐடியு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சங்க திருநெல்வேலி நாகர்கோவில் மண்டலங்கள் சார்பில் சிஐடியு சிறப்பு மாநாடு நடைபெற்றது இந்த மாநாட்டிற்கு சிஐடியு போக்குவரத்து தொழிலாளர் சங்க மண்டல பொதுச் செயலாளர் ஜோதி தலைமை தாங்கினார் நாகர்கோவில் மண்டல செயலாளர் சுரேஷ் வரவேற்று பேசினார் ஒய்வு பெற்ற நிர்வாகிகள் முத்துகிருஷ்ணன் ,வெங்கடாசலம், சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.முருகன் ,மாவட்ட தலைவர் காமராஜ், சிஐடி யு நாகர்கோவில் மண்டல தலைவர் சங்கரநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
சங்கத்தின் சம்மேளன துணை பொது செயலாளர் கனகராஜ் சிறப்பு மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.
போக்குவரத்து கழகங்களை பாதுகாத்திட வேண்டும், தனியார் மயம் அவுடசோர்சிங் முறையை தமிழக அரசு கைவிட வேண்டும், ஓய்வு பெற்றோரின் உரிமையை பாதுகாக்க வேண்டும் ,காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும், பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் வழங்க வேண்டும், பனிக்காலத்தில் இறந்த தொழிலாளியின் வாரிசு பணி நியமனம் செய்திட வேண்டும் போன்ற கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன
சங்கத்தின் சம்மேளன துணைத் தலைவர் பிச்சை நிறைவுறையாற்றினார் சிஐடியு அரசு வரை போக்குவரத்து கழக துணை பொதுச்செயலாளர் சுதர் சிங் நன்றி கூறினார், மாநாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்