மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ ராஜன்செல்லப்பா கடிதத்திற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுவிக் மாண்டியா பதில் அனுப்பியுள்ளார்
திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுவிக் மாண்ட வியாவுக்கு கடந்த ஜனவரி மாதம் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் குறித்து கோரிக்கை மனு அனுப்பி இருந்தார்.
அதில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட தோப்பூர் பகுதியில் அமைய உள்ள எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைவாக தொடங்கி முதற்கட்ட கட்டுமானப்பணிகளை விரைந்து முடித்து. 2023 ஆண்டுக்கான இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை தொடங்கவும், வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான ஏற்பாடுகளை செய்யவும் கோரிக்கை விடுத்தி ருந்தார்.
இந்த கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுவிக் மாண்ட வியா திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வுக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில்….தமிழ்நாட்டில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக மத்திய கேபினட் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக பிரதான் மந்திரி சுவாஷ்தியா யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஜப்பான் நாட்டின் ஜிக்கா ஏஜென்சியுடன் கடனுதவிக் கான ஒப்பந்தம் செய்துள் ளது. இந்த ஒப்பந்தம் கடந்த 2021-ம் ஆண்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 2026 ஆம் ஆண்டுக்குள் கட்டுமான பணிகள் அனைத்தும் முழு மையாக கட்டி முடிக்கப் படும். மேலும் கட்டுமான பணிகளை விரைவில் தொடங்க வசதியாக முதன்மை இயக்குனர், துணை இயக்குனர் (நிர்வாகம்) கண்காணிப்பு மற்றும் முதன்மை பொறியாளர், நிர்வாக அதிகாரி ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைவில் தொடங்குவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் மத்திய அரசு விரைவாக செய்து வருகிறது என பதில் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.