• Thu. Jan 8th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரைலிருந்து கோவைக்கு உடல் மாற்று உறுப்புகள் அனுப்பட்டது

ByKalamegam Viswanathan

Feb 16, 2023

மதுரை வேலம்மாள் மருத்துவமனையிலிருந்து உடல் மாற்று அறுவை சிகிட்சைகாக இதயம், கல்லீரல் கோயம்புத்தூர் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பட்டது.
மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் இருந்து கோவை பிஎஸ்ஜி மருத்துவமனைக்கு இதயமும், புதுக்கோட்டை முத்து மீனாட்சி மருத்துவமனைக்கு கல்லீரல்கொண்டு செல்ல படுகிறது. இரண்டு நோயாளிகளுக்கு பொருத்த எடுத்து செல்லப்படுகிறது.

விருதுநகர் அருகில் சாலை விபத்திற்குள்ளான செல்வம் (வயது 33) என்பவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று மூளை சாவு அடைந்து விட்டதால் அவரது இதயம் கோவை மருத்துவமனையில் சந்திரமோகன் எனும் நோயாளிக்கும் அவரது நுரையீரல் புதுக்கோட்டை மருத்துவமனையில் பாவுராவ் நகாடி என்பவருக்கும் பொருத்தப்பப்பட உள்ளது.ஆம்புலன்ஸ் வாகனம் சிந்தாமணி , திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையை கடந்து கோயம்புத்தூரை சென்றடையும். ஆம்புலன்ஸ் வாகனம் செல்வதற்கு ஏதுவாக மதுரை மாநகர போக்குவரத்துகாவல் துறை சார்பாக அனைத்து சந்திப்புகளிலும் பச்சை விளக்கில் தடையில்லாமல் எரியுட்டப்பட்டு ஆம்புலன்ஸ் கோயம்புத்தூர் நோக்கி சென்றது.
உயிர்காக்கும் மருத்துவ சேவைக்காக மனித நேயத்துடன் மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை சார்பாக 200-க்கும் மேற்பட்ட போக்குவரத்து காவலர்கள் பணியில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.