• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாக திருநங்கை போட்டி..!

Byவிஷா

Nov 2, 2023

தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாக பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் திருநங்கை போட்டியிட உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
வருகிற 30-ம் தேதி தெலுங்கானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது.இதில் முதல் முறையாக பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வாரங்கல் கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திருநங்கை லயா என்பவர் போட்டியிடுகிறார். வாரங்கல் ரமணா பேட்டையை சேர்ந்த லயா கல்லூரி படிப்பை முடித்துள்ளார். அவர் டெல்லியில் உள்ள கால் சென்டரில் ஆபரேட்டராக பணியாற்றினார். அந்த நேரத்தில் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து பணியாற்றி உள்ளார்.
தொடர்ந்து சொந்த ஊருக்கு வந்த அவர் கட்சியுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டதொடு மட்டுமல்லாமல், சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வந்தார். இதனைத் தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சி தெலுங்கானா தலைவர் பிரவீன் குமார் தேர்தலில் போட்டியிடுமாறு அழைப்பு விடுத்தார்.
இதனையடுத்து லயாவுக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்பட்டுள்ளது. அவர் வீடு வீடாகச் சென்று பகுஜன் சமாஜ் கட்சியின் கொள்கைகளை விளக்கி கூறி பிரசாரத்தை தொடங்கியுள்ளார். சமூகத்தின் ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு சேவை செய்ய அனுமதிக்க வேண்டும் என அவர் வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். தெலுங்கானாவில் முதன்முறையாக திருநங்கை போட்டியிடுவது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.