• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பள்ளிகல்வித்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் இடமாற்றம்

ByA.Tamilselvan

Sep 25, 2022

பள்ளிக்கல்வித் துறையில் 3 ஆண்டுக்கு மேலாக பணியாற்றினால் அவர்களை மாற்றம் செய்ய வேண்டும் என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள் புதிய உத்வேகத்துடன் செயல்படும் வகையில் அனைத்து அலுவலகங்களும் எவ்வித புகாருக்கும் இடமின்றி செயல்படும் வகையிலும் 3 ஆண்டுக்கு மேல் பணிபுரியும் மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள், கண்காணிப்பாளர்கள், பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்கள் ஆகியோருக்கு கலந்தாய்வு நடத்தி பணியிட மாறுதல் வழங்கவும், அதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு இணை இயக்குனர் நரேஷ் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன்படி நிதிக்காப்பாளர்களுக்கு 27-ந் தேதி மாநில அளவில் மாறுதல் கலந்தாய்வு நடக்கிறது. மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர் மற்றும் பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர்களுக்கு கவுன்சிலிங் அன்று நடக்கிறது. தொடர்ந்து 30-ந்தேதி வரை கலந்தாய்வு நடக்கிறது.