• Wed. Feb 12th, 2025

கல்லூரியில் யாசகம் தடுப்பு பயிற்சி முகாம்

ByKalamegam Viswanathan

Dec 21, 2024

மதுரை சமூக அறிவியல் கல்லூரி மற்றும் தேசிய சமூக பாதுகாப்பு ஆணையம் சார்பில், குழந்தைகள் யாசகம் எடுப்பதை தடுப்பதற்காக பணிகளை செய்யக்கூடிய நிறுவனங்களுக்கான 2 நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதன் துவக்க விழா சமூக அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில், மதுரை மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைத் திட்ட இணை இயக்குநர் சூர்யகலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இணை இயக்குநர் சூர்யகலா பேசும்போது, குழந்தைகள் யாசகம் பெறுவதிலும் பல முறைகளை இவர்கள் கையாள்வதைக் காண்கிறோம். பஸ்ஸிலும், ரயிலிலும் யாசகம் பெறுவது ஒரு வகை, இது பொதுவாக ஓரிரண்டு ரூபாய் சில்லறையைக் கொடுப்பதுடன் முடிந்து விடுகிறது. “குழந்தைகள் யாசகம் எடுப்பதை தடுப்பதற்காக, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக உள்ளது” என்றார். இந்நிகழ்வில், கல்லூரி முதல்வர் முனைவர் பி.ஜெயக்குமார் வரவேற்றார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் மு.நிஷாந்த் பயிற்சியின் நோக்கம் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். முடிவில், கல்லூரியின் உதவி பேராசிரியர் எஸ்.சார்லஸ் நன்றி கூறினார்.