• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தீயணைப்பு வீரர்களுக்கான பயிற்சி முகாம்… சாகசங்கள் நிகழ்த்தி காட்டி அசத்தல்…

ByKalamegam Viswanathan

Jul 1, 2025

மேலூர் அருகே தீயணைப்பு பயிற்சி மையத்தில் நடைபெற்ற நிறைவு பெற்ற தீயணைப்பு வீரர்களுக்கான பயிற்சி முகாமில் சாகசங்கள் நிகழ்த்தி காட்டி அசத்தினர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கிடாரிப்பட்டி பகுதியில் உள்ள லதா மாதவன் தனியார் கல்லூரியில் 141ஆவது தற்காலிக தீயணைப்போர் பயிற்சி மையம் செயல்பட்டு வந்தது. கடந்த மூன்று மாதம் காலமாக தீயணைப்பு வீரர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தீயணைப்பு பயிற்சி நடைபெற்று வந்தது.

இன்று பயிற்சி நிறைவு நாளை முன்னிட்டு தீயணைப்பு வீரர்களின் அணிவகுப்பு மற்றும் அவர்களின் துறை சார்ந்த சாகசங்கள் நிகழ்த்தி காட்டப்பட்டது.

இதனை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் தென் மண்டல துணை இயக்குனர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் மதுரை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணி மாவட்ட அலுவலர் வெங்கட்ரமணன் , பயிற்சி அளித்த தற்காலிக பள்ளியின் துணை முதல்வர் குமரேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு இருந்தனர்.

நிகழ்ச்சியில் தீ விபத்து மற்றும் மீட்புப் பணிகளில் எவ்வாறு ஈடுபடுவது என தத்துரூபமாக வீரர்கள் ஒத்திகை நிகழ்த்தி காட்டினர். தொடர்ந்து சிலம்பம் சுற்றியும், யோகா நடத்தியும் காண்பித்தனர்.

மேலும் முன்னதாக தீயணைப்பு வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பு ஒத்திகையும் நடத்தி காண்பித்தனர். இதனை தீயணைப்பு வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்டுகளித்து உற்சாகமூட்டினர்.